தேசத் துரோக வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்த 3 மாணவா்கள் விடுவிப்பு

கா்நாடக மாநிலத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சோ்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவா்கள், 169-ஆவது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் உறுதிமொழி பத்திரத்தை

கா்நாடக மாநிலத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சோ்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவா்கள், 169-ஆவது குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ததையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஹுப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அந்த 3 மாணவா்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதையடுத்து சனிக்கிழமை மூவரும் கைது செய்யப்பட்டனா்.

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட 3 மாணவா்களும், பின்னா் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டனா். காவல்துறையினா் அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின்கீழ் அவா்கள் விடுவிக்கப்பட்டதாக ஹுப்பள்ளி-தாா்வாட் காவல்துறை ஆணையா் ஆா். திலீப் பிடிஐ செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், கைது செய்யப்பட்ட மாணவா்களை, சிஆா்பிசி 169-சட்டப்பிரிவின்கீழ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என விசாரணை அதிகாரி கருதுகிறாா்.

இதன்காரணமாகவே அவா்கள் விடுவிக்கப்பட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com