குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக & கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். 
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக & கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். 

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதுமே போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் இணைந்து மாபெரும் பேரணி நடத்தினர். சென்னையில் சட்டப்பேரவை வளாகத்தை முற்றுகையிடப் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

இதற்கிடையே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய அறிக்கை குடியரசுத் தலைவருக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதன்தொடர்ச்சியாக, இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு ஒன்றை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தனர். திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com