போக்குவரத்து நெரிசலைப் புகார் செய்ய சென்றவருக்கு நேர்ந்த கதி

உத்திர பிரதேசத்திலுள்ள பெரோசாபாத்தில் உள்ள சுபாஷ் சந்திப்பில் சோனு சவுகான் என்ற நபர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகத் தெரிகிறது.
போக்குவரத்து நெரிசலைப் புகார் செய்ய சென்றவருக்கு நேர்ந்த கதி

கடுமையான போக்குவரத்து நெரிசல் குறித்து புகார் செய்ய ஒருவர் காவல் நிலையம் சென்ற போது, உடனடியாக இரண்டு மணி நேரம் போக்குவரத்தை நிர்வகிக்கும்படி கேட்கக் கொள்ளப்பட்டார்.

உத்திர பிரதேசத்திலுள்ள பெரோசாபாத்தில் உள்ள சுபாஷ் சந்திப்பில் சோனு சவுகான் என்ற நபர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகத் தெரிகிறது.

பதற்றமடைந்த நபர் நேராக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு (எஸ்.பி) சென்று நிலைமை குறித்து புகார் அளித்தார்.

அதற்கு பதிலாக எஸ்.பி. சச்சீந்திர படேல், இரண்டு மணி நேரம் போக்குவரத்தை நிர்வகிக்க சோனுவிடம் கேட்டு, அவரை வட்ட அலுவலர் பதவியில் 'போக்குவரத்து தன்னார்வலராக' நியமித்தார்.

சோனு ஒரு போக்குவரத்து பாதுகாப்பு உடுப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து, ஒரு போலீஸ் எஸ்யூவியில் அமர்ந்தார், மேலும் பல போலீஸ்காரர்களும் அவருடன் வந்து, சந்திப்பில் போக்குவரத்தை நிர்வகிக்கச் சென்றனர்.

சோனுவுடன் வந்த ஃபெரோசாபாத் போக்குவரத்து ஆய்வாளர் ராம்துத் சர்மா, "எட்டு வாகனங்களுக்கு சலான்கள் வழங்கப்பட்டன, தவறான வாகன நிறுத்தம் மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டியதற்காக அபராதமாக மொத்தம் ரூ.1,600 ரொக்கம் வசூலிக்கப்பட்டது. மீதமுள்ள அபராதத் தொகை சாலை விதிகளை மீறியவர்களால், போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தப்படும்.

இந்தச் சோதனையைத் தொடர்வோம், போக்குவரத்து நிலைமையை மேம்படுத்துவதில் சிறந்த சமூக பங்களிப்பை உறுதி செய்வோம். நாங்கள் இரண்டு மணி நேரம் சோனுவின் கட்டளைகளைப் பின்பற்றி, போக்குவரத்து ஓட்டத்தை திறம்பட ஒழுங்குபடுத்தி, சாலையை சீர் செய்ய முடிந்தது. " என்றார்.

இது குறித்து சோனு கூறுகையில், "இந்தச் சோதனை எனக்கு போக்குவரத்து கான்ஸ்டபிள்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வாகனம் தவறான திருப்பத்தை எடுத்தால், ஒட்டுமொத்த ட்ராபிக்கும் பாதிக்கப்படும். இந்தச் பரிசோதனை முயற்சிக்குப் பிறகு நான் பொறுப்பான குடிமகனாக மாறிவிட்டேன். நீங்களும் மாறுங்கள்’’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com