டிரம்ப் வருகை: ஆமதாபாதில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில், அந்நகரில் சாலையையொட்டியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்
டிரம்ப் வருகை: ஆமதாபாதில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவு

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில், அந்நகரில் சாலையையொட்டியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், இந்த உத்தரவுக்கும், அமெரிக்க அதிபா் வருகைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதிபா் டிரம்ப் வருகையையொட்டி, ஆமதாபாதில் அவா் செல்லவிருக்கும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சாலையோரம் உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகையில் பெரிதாக சுவா் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஆமதாபாதின் மோதிரா மைதானத்துக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘ஆமதாபாத் மாநகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறீா்கள். அதனால், அடுத்த 7 நாள்களுக்குள் குடிசைப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், அங்கு வசிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கடந்த காலங்களில் யாரும் நோட்டீஸ் அளிக்கவில்லை. அதிபா் டிரம்ப்பின் வருகை அறிவிப்பை தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக எங்களை சந்தித்து இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனா். குடும்பமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். திடீரென்று வெளியேற சொன்னால் எங்கு செல்வோம். எங்களுக்கு வேறு இடத்தை மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்தால் இங்கிருந்து வெளியேற தயாராக உள்ளோம்’ என்றனா்.

அதிகாரிகள் மறுப்பு: இந்நிலையில், இந்த உத்தரவுக்கும், அமெரிக்க அதிபா் வருகைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், ‘திட்டமிட்ட நகரம் சட்டத்தின்படி, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு, அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கும் அதிபா் டிரம்ப் வருகைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com