அப்பாவின் செல்லப் பெண்ணாக இருப்பதால்தான் இப்படி மாற முடிந்தது: நடிகை டாப்ஸி பன்னு

தற்போது "தப்பாட்" என்ற ஹிந்தி பட வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை டாப்ஸி பன்னு, ஒருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் பெற்றோரின் முக்கியத்துவம் குறித்து
அப்பாவின் செல்லப் பெண்ணாக இருப்பதால்தான் இப்படி மாற முடிந்தது: நடிகை டாப்ஸி பன்னு

தற்போது "தப்பாட்" என்ற ஹிந்தி பட வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை டாப்ஸி பன்னு, ஒருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் பெற்றோரின் முக்கியத்துவம் குறித்து ஒரு சுவாரஸ்யமான பதிவைப் பகிர்ந்துள்ளார், குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு இது அதிகம் பொருந்தும்.

டாப்ஸி வியாழக்கிழமை ட்விட்டடில் இது குறித்துப் பதிவிட்டிருந்தார்.  திரையில் அவரது தந்தையாக நடித்திருந்த குமுத் மிஸ்ராவுடன் சேர்ந்து எடுத்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருந்தது: "அப்பாவின் பெண்ணாக இருப்பது விஷயங்களை எளிதாக்குகிறது / கடினமாகவும் ஆக்கிறது. அமிர்தாவின் (டாப்ஸியின் கதாபாத்திரம்) வாழ்க்கைத் துணைவர் அவளது தந்தையைப் போன்ற ஒருவராக இருப்பார் என்று அவள் நினைத்தாள், ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்துக்குள்ளாயின. மனமுடைந்து போன நிலையில், அவளது தந்தை அதிலிருந்து அவளை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் இக்கதை. ஒரு அழகான தந்தை மகள் உறவை காட்சிப்படுத்துகிறது, பாருங்கள் # தப்பாட். "

அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ரத்னா பதக் ஷா, மனவ் கவுல், தியா மிர்சா, தன்வி ஆஸ்மி, ராம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

‘தப்பாட்’ பிப்ரவரி 28 ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com