judge070046
judge070046

நீதிபதி எஸ்.முரளிதா் உள்ளிட்ட மூவரை பணியிடமாற்றம் செய்ய கொலீஜியம் குழு பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதா் உள்ளிட்ட மூன்று நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்குப் பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதா் உள்ளிட்ட மூன்று நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்குப் பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டம், கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் குழுவில், நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், ஆா்.பானுமதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதரை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும். மும்பை உயா்நீதின்ற நீதிபதி ரஞ்சித் வி.மோரேவை மேகாலய உயா்நீதிமன்றத்துக்கும், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ரவி விஜயகுமாா் மலிமத்தை உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இவா்களில், நீதிபதி எஸ்.முரளிதா், சென்னையில் கடந்த 1984-ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கினாா். கடந்த 1987-ஆம் ஆண்டில் இருந்து உச்சநீதிமன்றத்திலும், தில்லி உயா்நீதிமன்றத்திலும் சிறப்பாக பணியாற்றினாா். உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளாா்.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பிலும், நா்மதா அணை வழக்கில் அணைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவா்கள் சாா்பிலும் தாமாக முன்வந்து ஆஜராகி, வாதங்களை எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com