மகா சிவராத்திரி: பென்சில் நுனியில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கம் வடிவமைத்த கலைஞர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நுண்கலை வடிவமைப்புக் கலைஞர் பென்சில் நுனி மற்றும் கல்லில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கம் வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மகா சிவராத்திரி: பென்சில் நுனியில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கம் வடிவமைத்த கலைஞர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நுண்கலை வடிவமைப்புக் கலைஞர் பென்சில் நுனி மற்றும் கல்லில் 0.5 இன்ச் அளவில் சிவலிங்கம் வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குர்தா மாவட்டத்தில் உள்ள ஜத்னி கிராமத்தைச் சேர்ந்தவர் எல். ஈஸ்வர் ராவ். நுண்கலைக் கலைஞரான (மினியேச்சர் ஆர்டிஸ்ட்) இவர், பிரசித்த பெற்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு, பென்சில் நுனிப் பகுதி மற்றும் நான்கு சிறிய கற்களைக் கொண்டு 0.5 இன்ச் அளவில் இரு சிவலிங்கங்களை வடிவமைத்துள்ளார்.

முதலில் கல்லில் வடிமைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு 2 நாள்களும், பென்சில் நுனியில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு ஒருநாளும் கால அவகாசம் தேவைப்பட்டதாகத் தெரிவித்தார். கண்ணாடிக் குடுவைக்குள் 4 சிறிய கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பொருத்துவது கடினமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

முன்னதாக, புளியங்கொட்டை மற்றும் பென்சில் நுனியைக் கொண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாட்டிலின் உள்பகுதியில் சர்ச் ஆகியவற்றை வடிமைத்து பலரது கவனத்தை ஈர்த்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com