கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் காலமானார்

கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சர் சன்னிகப்பா இன்று காலமானார். 
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் காலமானார்

கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சர் சன்னிகப்பா இன்று காலமானார். 

கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சரும், ம.ஜ.த., தலைவருமான சன்னிகப்பா பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலமானார். 

மறைத்த சன்னிகப்பா கொரடகெரே தொகுதியிலிருந்து மூன்றுமுறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அத்துடன் கர்நாடக மாநில வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 

இதனிடையே சன்னிகப்பா மறைவுக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com