உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும். 
உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குநரக அதிகாரி கே.கே.ராய் கூறுகையில்,

சுமார் 20 ஆண்டுகள் சந்தேகத்தையடுத்து மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட 5 மடங்கு அதிகமாகும்.

இந்த சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன என்று தெரிவித்தார்.

உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6 சதவீதமாகும். அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன், ரஷியாவிடம் 2,241.9 டன், சீனாவிடம் 1,948.3 டன், சுவிட்ஸர்லாந்திடம் 1,040 டன் மற்றும் ஜப்பானிடம் 765.2 தங்கம் கையிருப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com