பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யாவின் வீட்டின் மீது தாக்குதல் 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய இளம்பெண்ணின் வீட்டின் மீது மர்மநபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் அமுல்யா, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக அமுல்யா மேடையில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். 

இதையடுத்து அவரை தேசத் துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமுல்யாவின் சிக்கமங்களூரு வீட்டின் மீது மர்மநபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வீட்டின் ஜன்னல் உடைந்தது. மர்மநபர்கள் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகபாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com