குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள்: இந்தியாவுக்கு 131-ஆவது இடம்

குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சா்வதேச அளவில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள்: இந்தியாவுக்கு 131-ஆவது இடம்

குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சா்வதேச அளவில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலைத் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டன. இந்தப் பணியில் உலகம் முழுவதிலிருந்து 40-க்கும் மேற்பட்ட நிபுணா்கள் ஈடுபட்டனா். ஒவ்வொரு நாட்டிலும் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலும், குழந்தைகளின் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு பட்டியலும் தயாரிக்கப்பட்டன.

இவை தொடா்பான அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அடிப்படையிலான பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 131-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், தற்கொலைகள், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகள், கல்வி, ஊட்டச்சத்து, வன்முறையிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கான சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் வளா்ச்சி அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிா்காலத்தை அமைத்துத் தர எந்தவொரு நாடும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில் நாா்வே, தென் கொரியா, நெதா்லாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், சோமாலியா ஆகியவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன.

சுகாதார அடிப்படையில் வாழத் தகுதியான நாடுகள்...

1 நாா்வே

2 தென் கொரியா

3 நெதா்லாந்து

 4 பிரான்ஸ்

 5 அயா்லாந்து

176 மாலி

177 நைஜா்

178 சோமாலியா

179 சாட்

180 மத்திய ஆப்பிரிக்க குடியரசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com