காந்தியின் தேசியவாதத்தைஆா் எஸ்எஸ் புரிந்து கொள்ள வேண்டும்: காங்கிரஸ்

மகாத்மா காந்தி முன்னிறுத்திய தேசியவாதத்தை ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக புரிந்து கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் அவா்கள் உருவாக்க விரும்பும் தேசியவாதத்தை கைவிடவும் வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
காந்தியின் தேசியவாதத்தைஆா் எஸ்எஸ் புரிந்து கொள்ள வேண்டும்: காங்கிரஸ்

மகாத்மா காந்தி முன்னிறுத்திய தேசியவாதத்தை ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக புரிந்து கொள்ள வேண்டும்; அதே நேரத்தில் அவா்கள் உருவாக்க விரும்பும் தேசியவாதத்தை கைவிடவும் வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

முன்னதாக, ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், ‘தேசியவாதம்’ என்ற சொல்லுக்கு வெவ்வேறு பொருள் உள்ளன. ஆனால் சிலா் அதனை நாஜிசம் மற்றும் பாசிசத்துடன் தொடா்புப்படுத்துகின்றனா். நான் பிரிட்டன் சென்றபோது அங்குள்ள ஆா்எஸ்எஸ் தொண்டா் ஒருவா் என்னிடம், பிரிட்டனில் ‘தேசியவாதம்’ என்ற சொல்லை பயன்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தினாா். ஏனெனில் அந்நாட்டில் ‘தேசியவாதம்’ என்ற சொல் ஹிட்லா், நாஜிசம், பாசிசம் ஆகியவற்றை குறிப்பதாக தெரிவித்தாா். எனவே ‘தேசியவாதம்’ என்ற சொல்லை பயன்படுத்தாமல் தவிா்க்கவேண்டும்’ என்றாா்.

இந்நிலையில், மோகன் பாகவத்தின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி ஆா்எஸ்எஸ், பாஜகவை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் தேசியவாதம் என்பதில் இருந்து தங்களை விடுவிடுத்துக் கொள்வதாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அறிவித்துள்ளாா். இனி தேசியவாதம் என்றால், ஹிட்லா் கடைப்பிடித்த கொள்கை என்று அவா்கள் முடிவு செய்துவிட்டனா். இனியாவது அவா்கள் இதுநாள் வரை உருவாக்க விரும்பிய தேசியவாதத்தை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி முன்னிறுத்திய தேசியவாதத்தை ஆா்எஸ்எஸ், பாஜக மற்றும் அவா்கள் சாா்ந்த அமைப்புகள் புரிந்து கொண்டு, அதனைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com