வீடு தேடிச் செல்லும் மது: ம.பி. அரசின் மயக்கத் திட்டம்

வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்படுத்தியுள்ளது.
வீடு தேடிச் செல்லும் மது: ம.பி. அரசின் மயக்கத் திட்டம்

வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்படுத்தியுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்தியப்பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ், ஆன்லைனில் மதுபானம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. கலால் முறையில் வருவாயை அதிகரிப்பதற்காக, 2,544 உள்நாட்டு மதுபானங்கள் விற்கும் கடைகள் மற்றும் 1,061 வெளிநாட்டு மதுபானங்கள் விற்கும் கடைகளுடன் முந்தைய ஆண்டின் மதிப்பில் 25 சதவீதம் அதிகரித்து செயல்படுத்தப்படும்" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபானம் ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று விநியோகிக்கப்படும். மதுபான வியாபாரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக, ஒவ்வொரு மது பாட்டிலிலும் நிறுவப்பட்ட பார் குறியீடு அமைத்து கண்காணிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். 

புதிய மதுக்கடைகளை அமைக்க ஈ-டெண்டர் முறையில் ஏலம் விடப்படும். நான்கு முக்கிய மாவட்டங்களான இந்தூர், போபால், குவாலியர் மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுவகைகளுக்கென இரண்டு குழுக்களாக மது விற்பனைக் கடைகள் அமைக்கப்படும்.

திராட்சை உற்பத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், திராட்சை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் வைன் மதுவை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா இடங்களில் பதினைந்து புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com