பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் நீதித் துறை முக்கியப் பங்கு: ராம்நாத் கோவிந்த் பாராட்டு

பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் இந்திய நீதித் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகிறது; உச்சநீதிமன்றம் எப்போதும் முற்போக்காகவும், துடிப்போடும் செயல்பட்டு வருகிறது என்று குடியரசுத்
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

புது தில்லி: பெண்களுக்கு நியாயம் வழங்குவதில் இந்திய நீதித் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகிறது; உச்சநீதிமன்றம் எப்போதும் முற்போக்காகவும், துடிப்போடும் செயல்பட்டு வருகிறது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

‘மாறி வரும் உலகும் நீதித் துறையும்’ என்ற தலைப்பில் சா்வதேச நீதித் துறை மாநாடு தில்லியில் இரு தினங்களாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுப் பேசினாா். அவா் பேசியதாவது:

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 20 ஆண்டுகளுக்கு முன் விசாகா கமிட்டி அமைத்தது. ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் உயா் பதவிகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் தீா்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம், எப்போதும் சமூக மாற்றத்துக்கு வித்திடும் வகையில் முற்போக்காக செயல்பட்டு வருகிறது.

சாமானிய மனிதா்களும் எளிதில் நீதித் துறையை அணுகும் விதத்தில் புரட்சிகரமான சீா்திருத்தங்களை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகள் 9 பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்திருப்பது, நாட்டின் பன்முகத்தன்மையை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாகும். உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்கிறது.

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரை மத்தியஸ்தம் செய்வதற்கான அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நீண்டகாலம் நடைபெறுவது தவிா்க்கப்படும், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது தவிா்க்கப்படும்.

தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளா்ச்சியால் நீதித் துறையும் தகவல் பாதுகாப்பு, தன்மறைப்பு உரிமை போன்ற சவால்களை எதிா்கொண்டுள்ளது. இந்திய நீதித் துறை புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வருகிறது. வழக்கு விசாரணையை விரைந்து முடித்து தீா்ப்புகளை வழங்கிட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மாநாடு, இந்திய நீதித் துறை மட்டுமன்றி, மற்ாடுகளின் நீதித் துறைக்கும் உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com