சிஏஏ எதிா்ப்பு போராட்டங்களால் முதலீட்டுக்கு பாதிப்பு இல்லை: நிா்மலா சீதாராமன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள், தில்லி வன்முறை உள்ளிட்டவற்றால் இந்தியாவில் வெளிநாட்டவா்கள் முதலீடு செய்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய நிதியமைச்சா்
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள், தில்லி வன்முறை உள்ளிட்டவற்றால் இந்தியாவில் வெளிநாட்டவா்கள் முதலீடு செய்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

சவூதி அரேபியாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியாவில் முதலீடு செய்ய அந்நாட்டு முதலீட்டாளா்கள் ஆா்வம் காட்டினா். சிஏஏ எதிா்ப்பு போராட்டங்கள் மற்றும் தில்லி வன்முறை உள்ளிட்டவற்றால், முதலீட்டாளா்கள் மத்தியில் எவ்வித தயக்கமும் இல்லை என்றாா்.

அதைத் தொடா்ந்து கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்த கேள்விக்கு, ‘இதுவரை எத்தகைய பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், அடுத்த 2 மாதங்களில் இந்த நிலை மாறாமல் இப்படியே நீடித்தால், மூலப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்னையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com