என்பிஆர்-க்கு ஆதாரங்களைக் காட்ட முடியாது என்பவர்கள், ராமருக்கு ஆதாரம் கேட்கின்றனர்: ரவிசங்கர் பிரசாத்

என்பிஆர்-இன் போது தங்களது ஆவணங்களைக் காண்பிக்க முடியாது என வெளிப்படையாகக் கூறுபவர்கள், கடவுள் ராமருக்கான ஆதாரங்களைக் கேட்கின்றனர் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


என்பிஆர்-இன் போது தங்களது ஆவணங்களைக் காண்பிக்க முடியாது என வெளிப்படையாகக் கூறுபவர்கள், கடவுள் ராமருக்கான ஆதாரங்களைக் கேட்கின்றனர் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதாராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 

"எதிர்க்கட்சிகள் முதலில் தேர்தலில் எங்களைத் தோற்கடிக்கட்டும். அதன்பிறகு மதச்சார்பின்மை குறித்து எங்களுக்குப் பாடம் நடத்தட்டும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் மூன்று முக்கியப் புள்ளிகளை முன்வைத்துள்ளது. ஒன்று, இடிக்கப்பட்டது இடம் கடவுள் ராமரின் பிறப்பிடம். சர்ச்சைக்குரிய நிலத்தில் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்த முஸ்லிம் தரப்பினர் தவறிவிட்டனர். மூன்றாவது, பாபர் மசூதியின் கீழ் எடுக்கப்பட்ட கட்டமைப்புகள், இஸ்லாமியத்தைச் சேர்ந்தது அல்ல. 

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின்போது (என்பிஆர்) ஆவணங்களைக் காண்பிக்க முடியாது என வெளிப்படையாகக் கூறுபவர்கள், கடவுள் ராமருக்கு ஆதாரங்களைக் கோருகின்றனர். கடவுள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் சிலர் அதை நம்புவதில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com