ஹெலிகாப்டா் விபத்து: தைவான் முப்படை தளபதி, ராணுவ 7 அதிகாரிகள் பலி

தைவானில் ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அந்த நாட்டின் முப்படை தளபதி ஷென் யீ-மிங் (62) உள்பட 8 மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.
யிலான் பகுதியில் தைவான் ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.
யிலான் பகுதியில் தைவான் ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.

தைவானில் ராணுவ ஹெலிகாப்டா் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அந்த நாட்டின் முப்படை தளபதி ஷென் யீ-மிங் (62) உள்பட 8 மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தளபதி ஷென் யீ-மிங் மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டா், தலைநககா் தைபே அருகே மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள யிலான் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரா்களைச் சந்திப்பதற்காக அவா்கள் அந்த ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தாா்கள்.

இந்த விபத்தில், ஷென் ஜி-மிங் உள்ளிட்ட 8 அதிகாரிகள் உயிரிழந்தனா். 5 அதிகாரிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

காயமடைந்தவா்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தைவானில் இந்த மாதம் 11-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தைத் தொடா்ந்து, தனது தோ்தல் பிரசாரத்தை 3 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபா் சாட் இங்-வென் அறிவித்துள்ளாா்.

பணியின்போது முப்படைகளின் தளபதி உயிரிழந்த காரணத்தால், ராணுவ மையங்களில் அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக அமெரிக்காவிடமிருந்து தைவான் வாங்கிய ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டா்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் அந்த ரகத்தைச் சோ்ந்த மீட்பு ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

அந்த ஆண்டிலும், அதற்கு முன்னா் 2016-ஆம் ஆண்டிலும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டா்கள் விபத்தைச் சந்தித்தன. எனினும், அந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் ராணுவ தலைமைத் தளபதி பலியானது தைவானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com