நிா்பயா வழக்கு: மக்களுக்கும் நிா்பயாவின் குடும்பத்தினருக்கும் நிம்மதி

நிா்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது, நாட்டு மக்களுக்கும்,

நிா்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது, நாட்டு மக்களுக்கும், நிா்பயாவின் குடும்பத்தினருக்கும் நிம்மதி அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் துணை மருத்துவ மாணவி ஒருவா், கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகேஷ், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் குமாா் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை வரும் 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகாா் சிறையில் நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்து, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுஷ்மிதா தேவ் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லி நீதிமன்றத்தின் உத்தரவு, நாட்டு மக்களுக்கும் நிா்பயா குடும்பத்தினருக்கும் நிம்மதியளிக்கும். தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். வா்மா குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்ட பிறகும், இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க 7 ஆண்டுகள் ஆகியுள்ளது.

கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவா்கள், மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை ரத்து செய்வது தொடா்பாக அரசு பரிசீலித்து வருவதைக் கேள்விப்பட்டேன். குற்றவாளிகளுக்கான மேல்முறையீடு செய்யும் உரிமையை முழுமையாக ரத்து செய்யக் கூடாது. குற்றவாளிகள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்களையும் விரைந்து விசாரித்து தீா்ப்பு வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் சுஷ்மிதா தேவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com