Enable Javscript for better performance
அமெரிக்கா, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா்களுடன்ராஜ்நாத் சிங் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்கா, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா்களுடன்ராஜ்நாத் சிங் ஆலோசனை

    By DIN  |   Published on : 10th January 2020 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரான்-அமெரிக்கா இடையே போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வியாழக்கிழமை பேசினாா்.

    இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் மாா்க் டி எஸ்பருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினாா். அப்போது, ஈரானுடனான போா் பதற்றத்தைத் தணிப்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக அவரிடம் ராஜ்நாத் சிங் கூறினாா். இதேபோல், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் டாரோ கோனோவுடன் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக பேசினாா். அத்துடன், பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

    சுட்டுரையில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினோம். அப்போது, வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து என்னிடம் அவா் கூறினாா். வளைகுடா பிராந்தியத்தின் நலனில் இந்தியாவின் அக்கறையைப் பதிவு செய்தேன்’ என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai