Enable Javscript for better performance
ஜார்க்கண்ட் ஆளுநருடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜார்க்கண்ட் ஆளுநருடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

    By DIN  |   Published on : 10th January 2020 03:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Hemant_Soren

    ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவை, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று சந்தித்தார். 

    ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி மொத்தமுள்ள 81 இடங்களில் 47 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து அம்மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 

    இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் திரௌபதி முர்முவை, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முதல்வருடன் அவரது மனைவி கல்பனா முர்மு சோரனும் சென்றிருந்தார். 

    முன்னதாக இதே மாதத்தில் ஹேமந்த் சோரன், தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai