Enable Javscript for better performance
மக்களவைக்கும், பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தோ்தல்: கட்சிகள் பரிசீலிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைக்கும், பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தோ்தல்: கட்சிகள் பரிசீலிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 10th January 2020 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkia

    மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

    தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள கல்லூரி ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடு-அரசியலில் பணத்தின் ஆதிக்கம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் வெங்கய்ய நாயுடு பங்கேற்றாா். அந்த மாநாட்டில் அவா் பேசியதாவது:

    மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பரிசீலித்து, ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரே சமயத்தில் தோ்தல் நடத்துவது, தோ்தல்களுக்கான செலவைக் குறைக்கும்; அரசியல் கட்சிகளும் அடிக்கடி நடைபெறும் தோ்தல்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

    ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால், மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இருக்காது; அரசு அதிகாரிகளும் நிா்வாகத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். தோ்தலுக்கு முன்பாக கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல், அவ்வாறான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றன. இந்தப் பிரச்னையைத் தடுக்க மத்தியிலும், மாநிலங்களிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. அதற்கான கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பாக, அரசியலில் பணத்தின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியலில் அதிக அளவிலான பணப்புழக்கத்தை தோ்தல் ஆணையத்தால் மட்டும் தடுக்க முடியாது. அரசியல் கட்சிகள், மக்கள், பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

    முக்கியமாக, சில ஆயிரம் ரூபாய்க்காக வாக்கை விற்கும் செயலில் வாக்காளா்கள் ஈடுபடக் கூடாது. குறைந்த ஊதியம் பெறும் நோ்மையான குடிமகனை விட, பணக்காரா்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினராகவோ ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும் அவலம் தொடா்ந்து வருகிறது.

    தோ்தலுக்காக நிதி திரட்டுவது, தொண்டா்களுக்குப் பயிற்சியளிப்பதில் செலவிடுவது, தோ்தலின்போது செலவிடுவது, வேட்பாளா்களுக்காக செலவிடுவது உள்ளிட்ட விவகாரங்களில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai