2018-ல் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரம்

மிக நீண்ட தாமதத்துக்குப் பின்னர் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
2018-ல் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரம்

மிக நீண்ட தாமதத்துக்குப் பின்னர் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதுமான தகவல்களின் அடிப்படையில் விவசாயிகள் தற்கொலை கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2017-ஆம் ஆண்டைப் போன்று 2018-ஆம் ஆண்டிலும் 6 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற ஆறுதல் தகவலும் கிடைத்துள்ளது. முன்னதாக 2017-ஆம் ஆண்டில் 7 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களிலும் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

தேசிய குற்றப்பிரிவு ஆவண ஆணையம் (என்சிஆர்பி) வெளியிட்ட இந்த தகவல்களின் அடிப்படையில், 2018-ஆம் ஆண்டில் விவசாயம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 10,349 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-ல் 10,655-ஆகவும், 2016-ல் 11,379-ஆகவும் இருந்தது.

2018-ல் தற்கொலை செய்துகொண்டவர்களில் 5,763 பேர் விவசாயிகளாகவும், 4,586 பேர் விவசாயத் தொழிலாளர்களும் ஆவர். தற்கொலை செய்துகொண்ட 5,763 விவசாயிகளில் 5,088 பேர் தங்கள் சொந்த நிலங்களில் பயிரிட்டவர்கள், இதர குத்தகைதாரர்கள் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. 

2018-ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த 1,34,516 தற்கொலைகளில் 7.7 சதவீதம் விவசாயிகளுடையது. விவசாயிகளின் தற்கொலையில் 17,972 (13.4 சதவீதம்) பேருடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. 13,896 பேர் (10.3 சதவீதம்) தமிழகத்திலும், மேற்கு வங்கத்தில் 13,255 பேரும் (9.9 சதவீதம்), 11,775 பேருடன் (8.8 சதவீதம்) மத்தியப்பிரதேசமும், 11,561 பேருடன் (8.6 சதவீதம்) கர்நாடகமும் விவசாயிகள் தற்கொலையில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. இதன்மூலம் 2018-ல் தற்கொலை செய்துகொண்ட மொத்த விவசாயிகளில் 50.9 சதவீதம் இந்த மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதர 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் அளவு 49.1 சதவீதமாக உள்ளது. 

2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை இல்லாத 6 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களின் பட்டியல் பின்வருமாறு:

மேற்கு வங்கம்
பிகார்
ஒடிஸா
உத்தரகண்ட்
மேகாலயா
கோவா
சண்டிகர்
தாம் அண்ட் டையு
தில்லி
புதுச்சேரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com