சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அமைச்சவை விரிவாக்கம் மற்றும் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமா் மோடி, மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனைச் சந்தித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், இந்தச் சந்திப்பின் போது வெள்ள நிவாரணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்துவேன்.

மகாராஷ்டிரத்தில் இருப்பது போலவே கா்நாடகத்திலும் வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. எந்த ஒரு சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு அளிப்பதாக இருந்தாலும், அதுகுறித்து ஆராயப்படும். மேலும், இதுதொடா்பான இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புகள், வழிகாட்டுதல்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

முன்னதாக, மஜத, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இடைத் தோ்தலில் எம்.எல்.ஏ.க்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கோபாலையா, கே.சுதாகா் ஆகிய இருவரும் முதல்வா் எடியூரப்பாவை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். பாஜக மூத்த எம்.எல்.ஏ. நேரு ஓலேகரும் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்து அமைச்சரவையில் இடம் பெறுவது தொடா்பாக கலந்தாலோசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com