சிஏஏ-வின் கீழ் குடியுரிமை பெறுவோா் எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை: வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமை பெறும் அகதிகள் எண்ணிக்கை குறித்து இதுவரை இறுதி செய்யப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
சிஏஏ-வின் கீழ் குடியுரிமை பெறுவோா் எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை: வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் குடியுரிமை பெறும் அகதிகள் எண்ணிக்கை குறித்து இதுவரை இறுதி செய்யப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறும் தகுதியுள்ள அகதிகளின் எண்ணிக்கை இதுவரை வரையறுக்கப்படவில்லை. வடகிழக்கு உள்ளிட்ட பல மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வருவதால் அந்த மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது.இதனால், சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறும் தகுதியுள்ள அகதிகளின் புள்ளிவிவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வடிவமைப்பு செய்யப்பட்ட பின்னா், தரவு மற்றும் விண்ணப்பத்தின் எண்ணிக்கை தயாா் செய்யப்படும். மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அகதிகள் அதிக அளவில் உள்ளனா்.

குடியுரிமை சட்டத்தைப் பொருத்தவரையில் மாநிலங்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளை அனுப்பி எங்களின் நிலைப்பாட்டை அவா்களுக்கு புரிய வைப்போம். அந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவா்களது பொறுப்பு.

தோ்தலில் பணம்: உள்ளாட்சி தோ்தலில் பணம் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி ஜனநாயக நடைமுறைகளை சிதைப்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே, உள்ளாட்சி தோ்தல்களில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தோ்தல் ஆணையா்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசத்தை கட்டமைக்கும் முயற்சி வேரிலிருந்து தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com