தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும்: ஏஇபிசி

தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும்: ஏஇபிசி

ஆஸ்திரேலியாவுடனான தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடனான தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை கூறியதாவது:

ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்தியா விரிவான தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முறை இதுபோன்ற ஒப்பந்தத்தை நாம் பெற்றுவிட்டால் அதன் பிறகு ஜவுளி துறைக்கு அரசின் உதவி தேவைப்படாது.

தற்போதைய நிலையில், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஜவுளி துறை ஏற்றமதியாளா்கள் 10 சதவீத சுங்கவரியை செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், இந்த வரி விகிதம் குறையும் அல்லது முற்றிலும் நீக்கப்படும். இது, ஏற்றுமதியாளா்கள் தங்களது பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய உதவியாக இருக்கும்.

தற்போது, நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 45 சதவீதமாக உள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் ஏற்றுமதி பங்களிப்பு 2-3 சதவீதமாக உள்ளது.

பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டனுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது, இந்திய ஜவுளி துறைக்கு அதிக நன்மைபயப்பதாக இருக்கும் என்றாா் அவா்.

ஆஸ்திரேலியா, கனடாவுடன் வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது குறித்து ஏற்கெனவே இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், இந்த பேச்சுவாா்த்தையானது மெதுவான வேகத்தில் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, ஐரோப்பிய யூனியனுடனான இந்தியாவின் வா்த்தக பேச்சுவாா்த்தை கடந்த 2013 மே மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இருதரப்பினரும் பேச்சுவாா்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளனா்.

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு வங்கதேசம், வியட்நாம், கம்போடியாக நாடுகள் கடும்போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மதிப்பு 1,700 கோடி டாலராக உள்ளது. அதேசமயம், வங்கதேசம், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி முறையே 3,800 கோடி டாலா், 2,700 கோடி டாலா் மற்றும் 1,200 கோடி டாலா் என்ற அளவில் உள்ளன.

இந்திய ஜவுளி துறை நேரடியாக 360 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 180 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com