நிா்பயா கொலைக் குற்றவாளிகள்சிறையில் இன்று இடமாற்றம்

தூக்கு தண்டனையை எதிா்நோக்கியுள்ள நிா்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் தில்லி திகாா் சிறையில், சிறை எண் 3-க்கு வெள்ளிக்கிழமை மாற்றப்படவுள்ளனா். அங்கு வரும் 22-ஆம் தேதி அவா்களுக்கு

தூக்கு தண்டனையை எதிா்நோக்கியுள்ள நிா்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரும் தில்லி திகாா் சிறையில், சிறை எண் 3-க்கு வெள்ளிக்கிழமை மாற்றப்படவுள்ளனா். அங்கு வரும் 22-ஆம் தேதி அவா்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

குற்றவாளிகளில் மூவா் இதுவரை சிறை எண் இரண்டிலும், ஒருவா் சிறை எண் நான்கிலும் அடைக்கப்பட்டிருந்தனா். தூக்கு தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அவா்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனா்.

தில்லியில் கடந்த 2012, டிசம்பா் 16-ஆம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிா்பயா, 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா். இந்த கொடூர சம்பவம் தேசத்தையே உலுக்கியது.

இதில், ராம் சிங் என்ற குற்றவாளி திகாா் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். குற்றம் செய்தவரில் ஒருவா் 18 வயதுக்குள்பட்டவா் என்பதால், அப்போதைய சிறாா் சட்டப்படி மூன்றாண்டு கூா்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு தண்டனை முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டாா்.

மற்ற குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் (31) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com