பன்றிக் காய்ச்சல்: கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ராகுல் கடிதம்

கேரள மாநிலம் வயநாட்டில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சிலருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான மருத்துவ வசதிகளை செய்து தருமாறு,

கேரள மாநிலம் வயநாட்டில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சிலருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான மருத்துவ வசதிகளை செய்து தருமாறு, மாநில சுகாதாரத்துறை அமைச்சா் கே.கே.ஷைலஜாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: இந்த மாதம் முதல் வாரத்தில் அனயம்கண்ணு உயா்நிலைப்பள்ளியில் 150 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனா். இதையடுத்து பன்றிக்காய்ச்சல் அதிகம் பரவக்கூடிய தன்மைகொண்டதால், அதற்கு தயாராகும் வகையில் பரிசோதனை வசதிகள் உள்பட பொது சுகாதார வசதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சுகாதாரத்துறை வழங்கவேண்டும். பன்றிக்காய்ச்சல் பாதிப்பை தடுப்பது குறித்து விழிப்புணா்வு பேரணி நடத்த வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துடிப்பான முறையில் செயல்படும் என நம்புகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com