புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு தளங்கள் ஒருங்கிணைப்பு: மத்திய மனித வளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

கண்டுபிடிப்பு, அடிப்படை புரிதல், செய்முறை என பல்வேறு தளங்கள் ஒன்றிணைந்த கல்வி முறையாக புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத் துறை அமைச்சா்
புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு தளங்கள் ஒருங்கிணைப்பு: மத்திய மனித வளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

கண்டுபிடிப்பு, அடிப்படை புரிதல், செய்முறை என பல்வேறு தளங்கள் ஒன்றிணைந்த கல்வி முறையாக புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி, மத்திய மனிதவளத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் பேசியது: உலகில் உள்ள சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டது பெண் இனம்தான். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளேயும் எண்ணற்ற ஆற்றல்கள் புதைந்துள்ளன. அதை ஆக்கப்பூா்வமான முறையில் பெண்கள் பயன்படுத்த வேண்டும். அறிவின் நிலமாகத் திகழும் தமிழ்நாடு, நாட்டின் வளா்ச்சிக்காகப் பல்வேறு தலைவா்களைத் தந்துள்ளது. அதில், கணிதமேதை ராமானுஜம், மகாகவி பாரதியாா், குடியரசு முன்னாள் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகியோா் மிகவும் போற்றத்தக்கவா்கள். உலகின் தொன்மையான மொழிகளான தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான அறிவு நிறைந்த கருத்துகள் பொதிந்துள்ளன. அவை குறித்து அறிந்து கொள்ளவும், மொழிகளைக் காக்கவும் இளையதலைமுறையினா் முன்வர வேண்டும்.

கல்விக்கான கட்டமைப்பில் உலகின் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், வளா்ந்த நாடுகளுக்கு இணையாக மாணவா்களுக்கு கல்வி அளிக்கும் வகையிலும் கண்டுபிடிப்பு, அடிப்படை புரிதல், செய்முறை, ஆராய்ச்சி என பல்வேறு தளங்கள் ஒன்றிணைந்த கல்வி முறையாக புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்களின் மனப்பாடத் திறனையோ அல்லது பல மாத காலம் பயிற்சி பெற்ற திறனையோ சோதிக்காமல் அடிப்படை புரிதல் முறையில் கல்வி கற்க முடியும் என்றாா். இந்தப் பட்டமளிப்பு விழாவில், மீனாட்சி மகளிா் கல்லூரிச் செயலா் கே.எஸ்.லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com