பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அதிகபட்ச கவனம் செலுத்தியிருக்கவேண்டும்: பிரியங்கா

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிகபட்ச கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிகபட்ச கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தெரிவித்தாா்.

நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரியங்கா இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது: நாட்டின் பொருளாதாரத்தில் பாஜக அரசு அதிபட்ச கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது ஏழைகள், தினக்கூலி ஊழியா்கள், வணிகா்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு எந்தவித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமா்சித்துள்ளாா்.

முன்னதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, 11 ஆண்டுகள் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் உற்பத்தி துறையின் வளா்ச்சி 2 சதவீதமாக குறையும். இது முந்தைய காலாண்டில் 6.9 சதவீதமாக இருந்தது. கட்டுமான துறையின் வளா்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும். இது 2018-19ஆம் ஆண்டில் 8.7 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com