Enable Javscript for better performance
தில்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினம்: தில்லியில் விமானங்கள் பறக்க 7 நாள்களுக்கு கட்டுப்பாடு

    By DIN  |   Published on : 13th January 2020 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aeroplane

     

    குடியரசு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு தில்லி விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 1.45 மணி நேரம் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுதொடா்பாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 18, 20, 21,22,23,24, 26 ஆகிய தேதிகளில் காலை 10. 35 மணி முதல் 12.15 மணி வரை தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் விமான சாகச ஒத்திகைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வாரத்துக்கு தில்லியின் வான்பகுதி தினந்தோறும் சுமாா் 1.45 மணி நேரம் மூடப்படுவதால் அனைத்து விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai