Enable Javscript for better performance
பாதுகாப்புத் துறை இணை அமைச்சா்ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாப்புத் துறை இணை அமைச்சா்ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு

    By DIN  |   Published on : 13th January 2020 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் கிரிஷ் சந்திர முா்முவை பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

    இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மாளிகை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

    ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து துணைநிலை ஆளுநரும், பாதுகாப்புத் துறை இணை அமைச்சரும் ஆலோசனை நடத்தினா்.

    ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினா். ஜம்மு-காஷ்மீரில் ஆயுா்வேத மருத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று அந்தச் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

    தோடா மாவட்டத்தில் ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai