வாராணசி காசிவிஸ்வநாதர் கோயிலில் புதிய ஆடைக் கட்டுப்பாடு!

வாராணசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் கருவறைக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாராணசி காசிவிஸ்வநாதர் கோயிலில் புதிய ஆடைக் கட்டுப்பாடு!

வாராணசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் கருவறைக்குச் செல்லும் பக்தர்களுக்கு  ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காசி விஸ்வாநாதர் ஆலயம். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அரைகுறை ஆடை அணிந்து வருவதால் கோயிலின் பாரம்பரியம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இனி கோயிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையை அணிந்து வர வேண்டும் என்றும், பெண்கள் அனைவரும் சேலை அணிந்துவர வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில்  அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேண்ட், ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தூரத்திலிருந்து தான் கடவுளை வணங்க முடியுமே தவிர கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை காசி வித்வத் பரிஷத் அமைப்பு எடுத்துள்ளது. இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com