நூதன முறையில் 16 டன் தேங்காய் திருடிய மூன்று பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கேயத்தில் ரூ .16 லட்சம் (16 டன்) மதிப்புள்ள தேங்காய்களை திருடியதாக மூன்று பேர் அடங்கிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
நூதன முறையில் 16 டன் தேங்காய் திருடிய மூன்று பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை மாலை காங்கேயத்தில் ரூ.16 லட்சம் (16 டன்) மதிப்புள்ள தேங்காய்களை திருடியதாக மூன்று பேர் அடங்கிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

காங்கேயத்தில் காமச்சிபுரத்திலுள்ள தேங்காய் கொப்பரை விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் தமிழ்செல்வன். சனிக்கிழமை பிற்பகல் மூன்று பேர் கொண்ட குழுவினர் அவரை அணுகினர்.

கேரளத்தில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களுடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் மாலையில் வியாபாரப் பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டது.

15.6 டன்னுக்கு மேல் எடையுள்ள, மொத்தம் 320 தேங்காய்ப் பைகள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டன. ரூ.16 லட்சத்திற்கு பில் செய்யப்பட்ட பின்னர், இரவு 8 மணியளவில் சிறுநீர் கழிக்க வண்டியிலிருந்து இறங்கியுள்ளார் தமிழ்ச்செல்வன். ஆனால் அவர் திரும்பி வந்த போது லாரி மற்றும் அந்த மூவர் குழுவைக் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சில மணி நேரத்தில், கேரளத்தின் பாலக்காடு வரை சென்றபோது, அந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளூர் போலீஸாரின் உதவியுடன், தமிழ்நாடு போலீஸார் அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து, கோவையில் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com