சபாக் படம் எதிரொலி: ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு பென்ஷன் அளிக்க உத்தரகண்ட் அரசு திட்டம்

ஆசிட் வீச்குக்கு ஆளான பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சபாக் படம் எதிரொலியாக, ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை உத்தரகண்ட் அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது.
சபாக் படம் எதிரொலி: ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு பென்ஷன் அளிக்க உத்தரகண்ட் அரசு திட்டம்


டேஹ்ராடூன்: ஆசிட் வீச்குக்கு ஆளான பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சபாக் படம் எதிரொலியாக, ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை உத்தரகண்ட் அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது ஆசிட் வீச்சுக்கு ஆளான 10 - 11 பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா இது பற்றி தெரிவிக்கையில், ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 - 6000 வரை பென்ஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மரியாதையோடு தங்கள் வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு உத்தரக்கண்ட் அமைச்சரவை அனுமதி கிடைத்ததும், திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com