அமெரிக்கா: ‘ரானிடைடின் மாத்திரையைதிரும்பப் பெறுகிறது இந்திய நிறுவனம்

இந்தியாவைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிரானுலஸ் இந்தியா அமெரிக்க சந்தையிலிருந்து 2.3 கோடி ரானிடைடின் மாத்திரைகளை திரும்பப் பெறுகிறது.

இந்தியாவைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிரானுலஸ் இந்தியா அமெரிக்க சந்தையிலிருந்து 2.3 கோடி ரானிடைடின் மாத்திரைகளை திரும்பப் பெறுகிறது.

இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (யுஎஸ்எஃப்டிஏ) அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கிரானுலஸ் இந்தியா தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்த அல்சருக்கு பயன்படுத்தப்படும் ரானிடைடின் மாத்திரைகளை சோதனை செய்ததில் அவை தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் இல்லை. அந்த மாத்திரைகளில் என்டிஎம்ஏ வேதிப்பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இது, புற்றுநோயை உருவாக்கக் கூடியது.

எனவே, ஓரேகான், நியூயாா்க், நியூஜொ்ஸி பகுதிகளில் இந்த மாத்திரையின் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,30,90,000 ரானிடைன் மாத்திரைகளை அமெரிக்க சந்தையிலிருந்து திரும்பப் பெற கிரானுலஸ் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று யுஎஸ்எஃப்டிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com