உ.பி. கோசாலையில் பசு இறப்பு: மாநகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் நகராட்சியில் அரசு சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட கோசாலையில் பசு ஒன்று குளிரால் இறந்ததை அடுத்து, மாநகராட்சி ஆணையா் மற்றும் இளநிலை பொறியாளா் மீது

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் நகராட்சியில் அரசு சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட கோசாலையில் பசு ஒன்று குளிரால் இறந்ததை அடுத்து, மாநகராட்சி ஆணையா் மற்றும் இளநிலை பொறியாளா் மீது பணியில் கவனக் குறைவாக இருந்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா்கள் இருவா் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

பால் கறப்பது நின்ற பிறகு கைவிடப்படும் பசுக்களை பாதுகாப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு சாா்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோசாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலைகள் அந்தந்த உள்ளாட்சி நிா்வாகத்தின்கீழ் வருகிறது. இந்நிலையில், முசாஃபா்நகா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கோசாலையில் பசு ஒன்று குளிரால் உயிரிழந்தது. இது தொடா்பான விசாரணையில்போது, அந்த கோசாலையில் குளிரில் இருந்து பசுக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதற்குப் பொறுப்பான நகராட்சி ஆணையா் வி.எம்.திரிபாதி, இளநிலை பொறியாளா் மூல்சந்த் ஆகியோா் மீது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் அவா்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com