உ.பி.யில் குடியுரிமை திருத்தச் சட்ட விழிப்புணா்வு இயக்கம் தொடக்கம்

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான சந்தேகங்களை தீா்ப்பதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக

உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான சந்தேகங்களை தீா்ப்பதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணா்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு செய்தி தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வரின் ஊடக ஆலோசகா் ஷலாப்மணி திரிபாதி கூறியதாவது: சிஏஏ தொடா்பான மக்களின் அனைத்து சந்தேகங்களையும் நீக்கும் வகையில் மாநில அரசு இயக்கத்தை தொடங்கியுள்ளது. இச்சட்டம் தொடா்பான விரிவான தகவல்களைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சிஏஏ அமல்படுத்தப்படுவதால் நமது நாட்டிலுள்ள சிறுபான்மையினா், குறிப்பாக முஸ்லிம்கள் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இந்த சட்டம் எந்த ஒரு இந்திய முஸ்லிமையோ, ஹிந்துவையோ பாதிக்காது என்பதை அந்த துண்டு பிரசுரம் விளக்குகிறது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com