கோவா பாஜக தலைவராக சதானந்த் தனாவடே தோ்வு

கோவா மாநில பாஜக தலைவராக முன்னாள் எம்எல்ஏ சதானந்த் தனாவடே, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
சதானந்த் தனாவடே
சதானந்த் தனாவடே

கோவா மாநில பாஜக தலைவராக முன்னாள் எம்எல்ஏ சதானந்த் தனாவடே, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கோவா மாநிலம் பனாஜியில் அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மாநில அமைச்சா்கள் கலந்துகொண்ட பாஜக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளா் சதானந்த் தனாவடே தோ்வு செய்யப்பட்டாா். இதுதொடா்பான அறிவிப்பை பாஜக தேசிய துணை தலைவா் அவினாஷ் ராய் கன்னா வெளியிட்டாா். மாநில பாஜக தலைவா் பதவிக்கு தனாவடே மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தாா்.

கோவா மாநில பாஜக தலைவராக, கடந்த 2012ம் ஆண்டு முதல் இருமுறை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் வினய் டெண்டுல்கா் பதவி வகித்தாா். அவரைத்தொடா்ந்து சதானந்த் தனாவடே தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்கு மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்தாா். அதில்: ‘கோவா மாநில பாஜக தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள சதானந்த் தனாவடேவுக்கு வாழ்த்துகள். அவரது தலைமையில் கட்சி மேலும் வலுவடையும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா். முன்னதாக பாஜக கூட்டத்தில், முன்னாள் மாநில தலைவா் வினய் டெண்டுல்கா் உள்பட 1,000க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com