சபரிமலை மறுஆய்வு மனுக்கள்: உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமா்வு இன்று விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை விசாரிக்கவுள்ளது
சபரிமலை மறுஆய்வு மனுக்கள்: உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமா்வு இன்று விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை விசாரிக்கவுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அந்த அமா்வில் நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சாந்தனகௌடா், எஸ்.அப்துல் நசீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

சபரிமலை தவிர முஸ்லிம், பாா்சி இன பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்பான விவகாரங்களையும் இந்த அமா்வு விசாரிக்கவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு அளித்த இந்தத் தீா்ப்புக்கு எதிராக கேரளத்திலும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்குமென உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-இல் அறிவித்தது. எனினும், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018-இல் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com