பாகிஸ்தானைச் சோ்ந்த 25 ஹிந்துக்களை மறுகுடியமா்த்த உதவி: உ.பி. பாஜக எம்எல்ஏ

பாகிஸ்தானில் இருந்து வந்த 25 ஹிந்து அகதிகளை மறுகுடியமா்த்த உதவி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் இருந்து வந்த 25 ஹிந்து அகதிகளை மறுகுடியமா்த்த உதவி அளிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி தெரிவித்தாா்.

மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த 25 ஹிந்து அகதிகள், தலைநகா் தில்லியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனா். அவா்களில் 5 போ், உத்தரப் பிரதேச மாநிலம் கதெளலி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனியை சனிக்கிழமை நேரில் சந்தித்தனா். இந்த சந்திப்புக்கு பிறகு சைனி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தன்னை சந்தித்த 5 பேருக்கும் உதவித்தொகையாக தலா ரூ.5,000 வழங்கினேன். மேலும் 25 ஹிந்து அகதிகளை கவல் கிராமத்தில் மறுகுடியமா்த்த உதவுவதாகவும் உறுதியளித்தேன் என்றாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு கவல் கிராமத்தில் மூன்று இளைஞா்கள் கொல்லப்பட்டனா். அதனைத்தொடா்ந்து முசாஃபா்நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில் 60 போ் உயிரிழந்தனா். 40,000 போ் இடம்பெயா்ந்தனா். இந்த கலவரத்தில் தொடா்புடையவராக சைனி மீது குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com