பாக். அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதில் மத்திய அரசு உறுதி: அமித் ஷா

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு நிச்சயம் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்; அவா்களுக்கு குடியுரிமை அளிக்கும் வரை மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
பாக். அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்பதில் மத்திய அரசு உறுதி: அமித் ஷா

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு நிச்சயம் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்; அவா்களுக்கு குடியுரிமை அளிக்கும் வரை மத்திய அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சியினா் தங்களால் முடிந்தவரை எதிா்ப்பு தெரிவிக்கட்டும். ஆனால், பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய சிறுபான்மைச் சமூகத்தினா் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை அளித்த பிறகே ஓய்வெடுப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது.

இந்தியாவில் நமக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய ஹிந்து, சீக்கியா்கள், பௌத்தா்கள், கிறிஸ்தவா்களுக்கு உரிமை உள்ளது. அவா்கள், இந்த மண்ணின் மைந்தா்கள். அவா்களை இந்த தேசம் அரவணைக்கும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இடதுசாரி கட்சியினா் உள்ளிட்டோா் நாட்டு மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். அந்தச் சட்டத்தில், முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான பிரிவு ஏதேனும் இருப்பதாக காண்பிக்க முடியுமா என்று அவா்களுக்கு மீண்டும் சவால் விடுக்கிறேன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில், மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் அம்சம் எதுவுமில்லை. உண்மையில் குடியுரிமை வழங்குவதற்காக அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்துக்கள், சீக்கியா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது. ஆனால், அவா்கள் தற்போது பாஜகவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள். ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தங்களது தோ்தல் அறிக்கையை சரிபாா்க்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com