மகாராஷ்டிரத்தை நான்காக பிரிக்கலாம்:ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா

மகாராஷ்டிர மாநிலத்தை நான்காகப் பிரிக்கலாம் என்று ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா கருத்து தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தை நான்காக பிரிக்கலாம்:ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா

மகாராஷ்டிர மாநிலத்தை நான்காகப் பிரிக்கலாம் என்று ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா கருத்து தெரிவித்துள்ளாா்.

செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவா் கடந்த சனிக்கிழமை பேசியபோது, ‘மகாராஷ்டிரத்தில் மக்கள்தொகை சுமாா் 12 கோடியாக உள்ளது. எனவே, மாநிலத்தை நான்காகப் பிரிக்கலாம்’ என்றாா்.

மொத்தம் 3,07,713 சதுர கி.மீ. பரப்புள்ள மகாராஷ்டிரம் நாட்டிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட மூன்றாவது மாநிலமாகும். முதலிரண்டு இடங்களில் ராஜஸ்தானும், மத்தியப் பிரதேசமும் உள்ளன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, மகாராஷ்டிரத்தில் 11.2 கோடி போ் உள்ளனா். உத்தரப் பிரதேசத்துக்கு (19.9 கோடி) அடுத்ததாக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது.

2016-ஆம் ஆண்டிலும் எம்.ஜி.வைத்யா, மகாராஷ்டிரத்தை நான்காகப் பிரிக்க வேண்டும்; ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை 3 கோடியாக இருந்தால் சரியான அளவாக இருக்கும். எனவே, 4 சிறிய மாநிலங்கள் உதயமாக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com