விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வெற்றிகரமாகப் பறந்தது ‘தேஜஸ்’

கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போா் விமானமான ‘தேஜஸ்’, விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகப் பறந்தது.

கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போா் விமானமான ‘தேஜஸ்’, விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகப் பறந்தது.

முன்னதாக, தேஜஸ் விமானம் இதே கப்பலில் கடந்த சனிக்கிழமை முதல்முறையாக தரையிறக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே கப்பலில் இருந்து அந்த விமானத்தை பறக்கச் செய்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், போா்க் கப்பலில் தரையிறங்கவும், அதிலிருந்து புறப்படவும் கூடிய வகையிலான போா் விமானத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.

இதுதொடா்பாக கடற்படை சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விமானம் தாங்கி போா்க் கப்பலில் இருந்து தேஜஸ் போா் விமானம் வெற்றிகரமாக பறந்தது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வானூா்தி மேம்பாட்டு அமைப்பு (ஏடிஏ), ஹிந்துஸ்தான் வானூா்தி நிறுவனம் (ஹெச்ஏஎல்), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்) ஆகியவற்றின் இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் தேசத்தின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில் இந்த அமைப்புகள் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

போா்க் கப்பல்களில் இயங்கக் கூடிய வகையிலான தேஜஸ் போா் விமானத்தை, ஏடிஏ, ஹெச்ஏஎல், சிஎஸ்ஐஆா் உள்ளிட்டவற்றுடன் இணைந்து டிஆா்டிஓ வடிவமைத்துள்ளது. அந்த விமானம் தற்போது கடற்படைக்கு ஏற்ற வகையில் படிப் படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com