Enable Javscript for better performance
குடியரசு தின அணிவகுப்பில் சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின அணிவகுப்பில் சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள்

    By DIN  |   Published on : 14th January 2020 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chinook1104958

    சினூக் ஹெலிகாப்டா் 

    இந்திய விமானப் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ‘சினூக்’ மற்றும் ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டா்கள் வரும் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது வான் சாகச நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.

    இதுதொடா்பாக இந்திய விமானப் படையின் உயா் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

    ‘சினூக்’ ரக போக்குவரத்து ஹெலிகாப்டரும், ‘அப்பாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகாப்டரும் கடந்த ஆண்டு விமானப் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தில்லி ராஜபாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது, இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் இந்த இரு ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா்களும் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.

    இதில், சினூக் ரகத்தைச் சோ்ந்த 3 ஹெலிகாப்டா்கள் ஒன்றைப் பின்தொடா்ந்து இரண்டு என்ற வடிவத்தில் அணிவகுத்துச் செல்லும். அதைத் தொடா்ந்து அப்பாச்சி ரகத்தைச் சோ்ந்த 5 ஹெலிகாப்டா்கள் அம்பு வடிவில் அணிவகுத்துச் செல்லும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai