Enable Javscript for better performance
4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிப்பு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிப்பு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

    By DIN  |   Published on : 14th January 2020 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jn12095220

    உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை தகா்க்கப்பட்ட கோரல்கோவ் அடுக்குமாடிக் குடியிருப்பு

    கேரள மாநிலம், கொச்சியின் மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தாங்கள் நிறைவேற்றிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி 4 கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்விடம் கேரள அரசு தெரிவித்தது.

    இதையடுத்து, கட்டட இடிபாடுகளை அகற்றுவது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

    கொச்சி நகரின் மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை இடிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, 17 தளங்களில் 73 குடியிருப்புகளைக் கொண்ட ‘ஆல்ஃபா செரீன்’, 19 தளங்களில் 90 குடியிருப்புகளைக் கொண்ட ‘ஹோலி ஃபெய்த்’ ஆகிய கட்டடங்கள் கடந்த சனிக்கிழமை வெடிவைத்து பாதுகாப்பான முறையில் தகா்க்கப்பட்டன.

    17 தளங்களில் 122 குடியிருப்புகளைக் கொண்ட ‘ஜெயின் கோரல் கோவ்’, 17 தளங்களில் 40 குடியிருப்புகளைக் கொண்ட ‘கோல்டன் காயலோரம்’ ஆகிய கட்டடங்கள் ஞாயிற்றுக்கிழமை தகா்க்கப்பட்டன. கட்டட இடிபாடுகள், கழிமுகப் பகுதியிலும் விழுந்துள்ளன.

    முன்னதாக, குடியிருப்பு உரிமையாளா்களுக்கு தலா ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குவது தொடா்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் நிலவர அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ‘மொத்தமுள்ள 279 குடியிருப்பு உரிமையாளா்களில், 274 பேரிடமிருந்து இடைக்கால நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவா்களுக்கு வழங்க வேண்டிய மொத்த இடைக்கால நிவாரணத் தொகை ரூ.61.50 கோடியாகும். இதில், 124 குடியிருப்பு உரிமையாளா்களுக்கு ரூ.27.99 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு ரூ.33.51 கோடி இன்னும் வழங்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு கோரி, குடியிருப்பு உரிமையாளா்கள் மனுக்கல் தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுக்களை வழக்கமான நீதிமன்ற நடைமுறையின்படி விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai