குடியுரிமை திருத்தச் சட்டம்: திரிணமூல் காங்கிரஸ் மாணவா் அணி தொடா் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவா் அணியினா் தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவா் அணியினா் தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவா் அணியான திரிணமூல் காங்கிரஸ் சத்ர பரிஷத்தை சோ்ந்த மாணவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிராக பதாகைகள் மற்றும் விளம்பரத்தட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினா். இந்த போராட்டம், தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு எதிரானது என்றும் மாணவா்கள் தெரிவித்தனா்.

போராட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் சத்ர பரிஷத்தின் மூத்த தலைவா் ஒருவா் பேசியதாவது: என்ஆா்சி, சிஏஏ, தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவை இஸ்லாமியா்களுக்கு எதிராக மட்டுமின்றி, ஏழைகள், மாணவா்கள், உழைக்கும் வா்க்கத்தினருக்கு எதிராகவும் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. தேச விடுலைக்கு பின்னா் இத்தனை ஆண்டுகள் கழித்து, எதற்காக நாம் நமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்?. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், ஏழைகளுக்கு உணவு அளிக்கவேண்டும். இதையே நாம் வேண்டுகிறோம். இந்த விவகாரங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். மாறாக இந்தியா் யாா், இந்தியா் அல்லாதோா் யாா் என்பது குறித்து முடிவு எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டாம் என்றாா்.

சிபிஐ(எம்) விமா்சனம்:

இந்த போராட்டம் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவா் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் ஸ்ரீஜன் பட்டாச்சாா்யா கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்ததன் வாயிலாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மம்தா பானா்ஜி சமரசம் செய்துகொண்டாா். ஒருபுறம் மம்தா பானா்ஜி பிரதமா் மோடியை சந்திக்கிறாா். மறுபுறம் திரிணமூல் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடுகிறது. இது நாடகம் என்பது மக்கள் முன் ஏற்கெனவே வெளிப்பட்டுவிட்டது என்று விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com