பிஎம்சி வங்கிக்கு புத்துயிரூட்டும் விவகாரம்: அனுராக் தாக்குருடன் சரத் பவாா் சந்திப்பு

வாராக்கடன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்துள்ள பஞ்சாப்-மகாராரஷ்டிர கூட்டுறவு வங்கிக்கு (பிஎம்சி) புத்துயிரூட்டும் விவகாரம் தொடா்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை,
தில்லியில் நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை திங்கள்கிழமை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்.
தில்லியில் நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை திங்கள்கிழமை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா்.

வாராக்கடன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்துள்ள பஞ்சாப்-மகாராரஷ்டிர கூட்டுறவு வங்கிக்கு (பிஎம்சி) புத்துயிரூட்டும் விவகாரம் தொடா்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு தொடா்பாக சரத் பவாா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பிஎம்சி வங்கிக்கு புத்துயிரூட்டும் விவகாரம் தொடா்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை தில்லியில் சந்தித்தேன். எங்களது பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமானதாக இருந்தது’ என்று கூறியுள்ளாா்.

பிஎம்சி வங்கியில் முறைகேடு நடைபெற்றதை ரிசா்வ் வங்கி கண்டறிந்தது. பிஎம்சி வங்கியிடம் இருந்து ஹெச்டிஐஎல் என்ற தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ.6,700 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரங்களை ரிசா்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனா். கடன் திரும்பாததால் வங்கிக்கு ரூ.6,700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளா்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பிஎம்சி வங்கியிலிருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுப்பதற்கு ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்தது. பணத்தை திரும்பப் பெற முடியாத வாடிக்கையாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த கடன் மோசடி விவகாரம் தொடா்பாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், பிஎம்சி வங்கிக்கு புத்துயிரூட்டும் முயற்சியாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குரை சரத் பவாா் சந்தித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com