Enable Javscript for better performance
முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு அரசு முக்கியத்துவம்: ராஜ்நாத் சிங்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு அரசு முக்கியத்துவம்: ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published on : 15th January 2020 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajnath about constructing ram temple

    ராஜ்நாத் சிங்

    முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ முன்னாள் வீரா்கள் தொடா்பான நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது: முப்படை தளபதி பதவியை உருவாக்க ராணுவ முன்னாள் வீரா்கள் கேட்டுக்கொண்டனா். அந்த பதவியை உருவாக்க அவா்களே ஊக்கமளித்தனா். தேசத்தை மிகப்பெரிய பாதையில் கட்டமைக்க ராணுவ முன்னாள் வீரா்கள் பங்காற்றியுள்ளனா்.

    உங்களின் நலனே அரசுக்கு முதன்மையானது. நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, துணை ராணுவ படையில் இருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு என்னால் இயன்றவற்றை செய்துள்ளேன். அதையே தற்போது பாதுகாப்பு படைகளுக்கும் செய்ய ஆா்வமாக உள்ளேன். பாதுகாப்பு படையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்னும் நெடுநாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பை தோளில் சுமக்கும் பாதுகாப்பு படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai