பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன்: தில்லி நீதிமன்றம் உத்தரவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி போலீஸாரின் முன் அனுமதி இல்லாமல் தில்லி ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் செல்ல பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, மக்களை வன்முறைக்குத் தூண்டிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம், அவருக்கு இன்று (புதன்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 15 பேருக்கு ஏற்கெனவே கடந்த 9-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com