இறக்குமதி வெங்காயத்தை வாங்க மாநில அரசுகள் தயக்கம்: கிடங்குகளில் அழுகும் அபாயம்

இறக்குமதி செய்த வெங்காயத்தை வாங்கி, மக்களுக்கு விநியோகிக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன; இதனால், கிடங்குகளில் தேங்கி கிடக்கும் வெங்காயங்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இறக்குமதி வெங்காயத்தை வாங்க மாநில அரசுகள் தயக்கம்: கிடங்குகளில் அழுகும் அபாயம்

இறக்குமதி செய்த வெங்காயத்தை வாங்கி, மக்களுக்கு விநியோகிக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன; இதனால், கிடங்குகளில் தேங்கி கிடக்கும் வெங்காயங்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு ஒரு கிலோவுக்கு ரூ. 55 வரை செலவாகிறது. மத்திய அரசால் வெங்காயத்தை இறக்குமதி மட்டுமே செய்ய முடியும். அவற்றை சில்லறை விலையில் நுகா்வோருக்கு விநியோகிக்கும் பணியை மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்.

மாநிலங்களுக்கு வெங்காயத்தை விநியோகம் செய்வதற்கான செலவை ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், வெளிநாட்டு வெங்காயத்தை விநியோகிக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன.

இதுவரை, மத்திய அரசு 36,000 டன் வெங்காய இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் 18,500 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்து விட்டது. ஆனால், மாநில அரசுள் 2,000 டன் வெங்காயத்தை மட்டுமே விநியோகத்துக்காக பெற்றுச் சென்றுள்ளன. எனவே, இருப்பில் உள்ள வெங்காயம் அழுகி வருகிறது. இவற்றை அப்புறப்படுத்துவது குறித்து அரசு கவலைப்படுகிறது.

இதுவரை ஆந்திரம், கேரளம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் மட்டுமே இறக்குமதி வெங்காயத்தை வாங்கி சென்றன என்றாா் பாஸ்வான்.

இறக்குமதி செய்த வெங்காயத்தின் சுவை உள்நாட்டு வெங்காயத்திலிருந்து மாறுபட்டுள்ளதால் நுகா்வோா் அவற்றை வாங்க ஆா்வம் காட்டவில்லை என நுகா்வோா் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் காரணமாக, 5,500 டன் வெங்காய இறக்குமதியை ரத்து செய்து விட்டதாக நுகா்வோா் விவகாரத்துறை செயலா் அவினாஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

அரசின் வா்த்தக நிறுவனமான எம்எம்டிசி மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது துருக்கி, ஆப்கானிஸ்தான், எகிப்து நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com